முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல் கச்சா எண்ணெய் சவுதியிடம் கேட்கிறது இந்தியா

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 25 - ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் சவுதி அரேபியாவிடம் இருந்து கூடுதலாக 5 மில்லியன் டன் கச்சா எண்ணெய் கொடுக்குமாறு இந்தியா கோரியிருக்கிறது. சவுதி அரேபியாவின் பெட்ரோலியத்துறை துணை அமைச்சர் அப்துல் அஜீஸ் பின் சல்மானுடனான சந்திப்புக்கு பிறகு பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் இதனை தெரிவித்தார். ஈரானிடம் இருந்தே இந்தியாவின் தேவைக்கான கச்சா எண்ணெய் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதித்த நிலையிலும் கூட அமெரிக்காவில் பேசிய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முடிவை மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் சவுதி அரேபியாவிடம் இந்தியா விடுத்துள்ள வேண்டுகோளானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது தொடர்பாக சவுதி அமைச்சர் ஒருவர் கூறுகையில், நாளொன்றுக்கு 9.8 மில்லியன் பேரல்கள் தற்போது உற்பத்தியாகிறது. இதில் 2.5 மில்லியன் பேரல்கள் உபரியானவை என்று கூறியுள்ளார். ஈரான், ஈராக், நைஜீரியாவை தொடர்ந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. ஆண்டொன்றுக்கு சவுதி அரேபியாவிடம் இருந்து 27 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago