முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பிரச்சார பயணத்தில் மாற்றம்

புதன்கிழமை, 23 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச் 23 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தில் 27.3.2011 முதல் 2.4.2011 வரை பிரச்சாரம் செய்யும் இடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

இதுகுறித்த விபரம் வருமாறு:- அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், கூட்டணி தலைவருமான ஜெயலலிதா, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து நாளை முதல் (மார்ச் 24) முதல் ஏப்ரல் 11-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சுறாவளி பிரச்சாரம் செய்கிறார். 

தனது பிரச்சாரத்தை நாளை (மார்ச் 24) ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, திருச்சி மாம்பழச் சாலையில் தொடங்கி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பாலக்கரையில் முடிக்கிறார். தொடர்ந்து ஏப்ரல் 11-ந் தேதி வரை தனது அனல் தெறிக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இதில் ஏற்கனவே அறிவித்த பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள 7 நாட்களுக்கான திருத்தப்பட்ட சுற்றுப்பயண விபரம் வருமாறு:-

3-ம் நாள், 26.3.2011- சனிக்கிழமை: திருச்சி- திருச்சி, வழி: கம்மரம்பேட்டை, அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, காவல்காரன் பாளையம், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், பெரிய கருப்பூர்,கோப்பு, போசம்பட்டி, கீரிக்கல்மேடு, பள்ளக்காடு (கைகாட்டி), அதவத்தூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, புங்கனூர். 

4-ம் நாள், 27.3.2011- ஞாயிற்றுக் கிழமை): திருச்சி- கந்தர்வகோட்டை- தஞ்சாவூர், வழி: கந்தர்வகோட்டை, கல்லாக்கோட்டை, திருவோணம், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, உலூர், தஞ்சாவூர்,திருவையாறு, தஞ்சாவூர். 

5-ம் நாள் 28.3.2011- திங்கட்கிழமை: தஞ்சாவூர்- திருவாரூர்- மயிலாடுதுறை- கடலூர்- புதுச்சேரி, வழி: திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், ரெட்டி சாவடி, ரோடியர் மைதானம், புதுச்சேரி. 

6-ம் நாள், 29.3.2011- செவ்வாய் கிழமை, புதுச்சேரி- விழுப்புரம்- திருவண்ணாமலை, வழி:வேலூர், காஞ்சிபுரம். 

7-ம் நாள், 30.3.2011- புதன் கிழமை: சென்னை- வேலூர்- சென்னை, வழி: வேலூர், காஞ்சிபுரம். 

8-ம் நாள், 1.4.2011- வெள்ளிக் கிழமை: சென்னை- தூத்துக்குடி- கன்னியாகுமரி- திருநெல்வேலி, வழி: கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி. 

9-ம் நாள், 2.4.2011- சனிக்கிழமை: திருநெல்வேலி- தூத்துக்குடி- சிவகாசி- மதுரை, வழி: தூத்துக்குடி, சிவகாசி, மதுரை.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony