திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்.

புதன்கிழமை, 7 மார்ச் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்செந்தூர், மார்ச்.7 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ரூம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அகஸ்தியர், அப்பர், அருணகிரிநாதர், ஆதிசங்கரர், பகழிக்கூத்தர், குமரகுருபர் ஆகியோர் அருள்பெற்ற பழமையான தலமாகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் மாசித் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 26ரூந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் முருக பெருமானுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து, பச்சை ஆடை உடுத்தி பாத யாத்திரை வந்தனர். அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வந்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் காலை 7.40 மணிக்கு விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. 4 ரதவீதிகளையும் பவனிவந்த தேர் 8.10 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தேருக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து காலை 8.25 மணிக்கு திருத்தேர் இழுக்கப்பட்டது. திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் அர.சுதர்சன், உதவி ஆணையர் க.செலத்துரை, கண்காணிப்பாளர்கள் செல்வகுமாரி, வெங்கடேசன், ராமசாமி, சுப்பையா, ாதினத்தந்திா அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், ராமச்சந்திர ஆதித்தன், பாலசுப்பிரமணிய ஆதித்தன், கண்ணன் ஆதித்தன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தேரோட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், திருச்செந்தூர் நீதிபதி மு.ப்ரீதா, ஏரல் சேர்மன் அருணாசல சாமி கோயில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தபாண்டிய நாடார், தாமிரபரணி அறக்கட்டளை நிறுவனர் டி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், யூனியன் தலைவர் ஹேமலதா லிங்ககுமார், துணை தலைவர் சண்முகசுந்தரம், நகர பஞ்சாயத்து தலைவர் சுரேஷ்பாபு.

அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் பள்ளத்தூர் முருகேசன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் பார்வதிமுத்து, தே.மு.தி.க. ஒன்றிய செந்தில் குமார், இந்து முன்னணி மாநில தலைவர் அரசுராஜா, துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் அ.தி.வித்தியாசாகர், தொழில் அதிபர்கள் தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில துணை தலைவர் அரிகரமுத்து அய்யர், மூர்த்தி, ரமணி, ஆனந்த், சங்கரசுப்பிரமணியன் மற்றும்

ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வினோத், தக்கார் நேர்முக உதவியாளர் நாகராஜன், ஆலய பணியாளர்கள், திரிசுதந்திரர்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். 

10.15 மணிக்கு சுவாமி தேர் நிலைக்கு வந்தது. தொடர்ந்து 10.35 மணிக்கு அம்பாள் தேர் இழுக்கப்பட்டது. 4 ரதவீதிகள் சுற்றி 11.30 மணிக்கு அம்பாள் தேர் நிலைக்கு வந்தது.

தேர் திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று (புதன்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) சுவாமி, அம்பாள் பூங்கேடய சப்பரத்தில் வீதிஉலாவுடன் விழா நிறைவுபெறுகிறது.

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரதாபன், இசக்கி, ராஜாமணி மற்றும் 300ரூக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ்ாடுபட்டு இருந்தனர்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: