முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் கைகலப்பு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், மார்ச். 14 - கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் நேற்று எம்.எல்.ஏக்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக அம்மாநில மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபாமுப்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஊழலில் மத்திய அமைச்சரும், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவின் தந்தையுமான பரூக் அப்துல்லாவுக்கும் தொடர்பு உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் நேற்று மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பி பிரச்சினையை கிளப்பினர். இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவருக்கும், ஆளும் தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ. ஒருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்