முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் ஊரில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சங்கரன்கோவில்.மார்ச்.16. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் பிரச்சாரத்திற்காக சங்கரன்கோவில் தொகுதிக்கு முதல்வர் வந்து சென்ற பின் அதிமுகவின் வெற்றி விகிதம் இன்னும் அதிகரித்து விட்டது. அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி கொளுத்தும் வெயிலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று மாலை 5மணியுடன் பிரச்சாரம் முடிவதால் அமைச்சர்களும் நிர்வாகிகளும் போட்டி போட்டுக்கொண்டு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அமைச்சர் கருப்பசாமியும் சொந்த ஊரான புளியம்பட்டியில் வேட்பாளர் முத்துசெல்வி வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன், அமைச்சரின் மகனும் இளைஞர் பாசறை இணை செயலாளருமான மாரிச்சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெய்சங்கர், சங்கரன்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் அன்னலட்சுமி காளிராஜ், ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஊராட்சி செயலாளர் எஸ்கே கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேடி;, ஒன்றிய குழு உறுப்பினர் மாரியப்பன், நம்பிராஜன், வைரவன், மாரியப்பன், நகர எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் அந்தோணி உள்ளிட்ட ஏராளமானவர்கள் சென்றனர். அமைச்சரின் ஊரில் எதிர்ப்பு என்று சில ஏடுகள் பொய் செய்தி வெளியிட்ட நிலையில் அமைச்சரின் மகன், மற்றும் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து வேட்பாளருடன் வாக்கு சேகரித்த காட்சி நெகிழ வைத்தது. அனைத்து வீடுகளிலும் பெண்கள் குலவையிட்டும், ஆரத்தி எடுத்தும் முத்துசெல்வியை வரவேற்றனர். வயல் வெளியில் வேலை செய்தவர்களிடமும் வேட்பாளர் சென்று வாக்கு சேகரித்து அவர்களின் ஆசியை வேண்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்