முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ.ராசா உதவியாளர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் திடீர் ரெய்டு

வியாழக்கிழமை, 24 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

பெரம்பலூர், மார்ச்.24 - பெரம்பலூரில் முன்னாள் மத்திய தி.மு.க. அமைச்சர் ராசாவின் உதவியாளர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் உதவியாளராக இருப்பவர் அறிவுச் செல்வன். இவர் மதனகோபாலபுரத்தில் வசித்து வருகிறார். தேர்தலையொட்டி மதனகோபாலபுரம் பகுதியில் தி.மு.க.வினர் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து பெரம்பலூர் தாசில்தார் சரவணன் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் அறிவுச் செல்வன் வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதையறிந்த தி.மு.க. நிர்வாகிகள் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சோதனை நடத்த மறுப்பு தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்கள் வீட்டின் உள்ளே சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையில் பணம் ஏதும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago