முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்புமனு தாக்கல்

வியாழக்கிழமை, 24 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.24 - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்பட கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் இன்று ஒரே நாளில் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள். 

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி அ.தி.மு.க.தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் இடது,கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.மு.க., புதிய தமிழகம், சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தொகுதிகள் பங்கீடும் முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பாக முதலில் 160 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியில் அறிவிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு முழுமை பெற்ற பின்னர் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கலாம் என்று கூட்டணி கட்சிகள் கோரின. இதை பரிவுடன் பரிசீலனை செய்த ஜெயலலிதா, கூட்டணி கட்சிகள் கேட்டபடி தொகுதிகளை பெருந்தன்மையுடன் ஒதுக்கிக்கொடுத்தார். அதனால் முதலில் அறிவிக்கப்பட்டத வேட்பாளர் பட்டியல் திருத்தப்பட்டு மீண்டும் அறிவிக்கப்பட்டது. அதில் அ.தி.மு.க. பொட்டியிடும் 160 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியில் அறிவிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து இன்றுமுதல் 18 நாட்களுக்கு சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்கிறார். தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். போடிநாயக்கனூர் தொகுதியில் கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வமும் ஆண்டிபட்டி தொகுதியில் தங்க தமிழ் செல்வனும் போட்டியிடுகிறார்கள். 

பொதுச்செயலாளர் ஜெயலலிதா 160 தொகுதிகளுக்கும் மறுபடியும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வேட்பாளர்கள் அனைவரும் இன்று (வியாழக்கிழமை) வேட்புமனுத்தாக்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி இன்று ஜெயலலிதா உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்கள் 160 பேரும் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கழக வேட்பாளர்களும் தொண்டர்களும் செய்துள்ளனர். சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க. அமைச்சர் க.அன்பழகனை எதிர்த்து ஜே.சி.டி. பிரபாகரன் போட்டியிடுகிறார். திருமங்கலம் தொகுதியில் எம்.முத்துராமலிங்கம்,சோழவந்தான் தொகுதியில் கருப்பையா, மதுரை மேற்கு தொகுதியில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் கே.ராஜூ, மதுரை வடக்கு தொகுதியில் ஏ.கே. போஸ் மதுரை, கிழக்கு தொகுதியில் கே.தமிழரசன்,மேலூர் தொகுதியில் ஆர்.சாமி ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் அனைவரும் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony