எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பார்சிலோனா,மார்ச்.- 1 - இந்தாண்டு இறுதிக்குள் 4ஜி அலைக்கற்றையை ஏலம் விடப்படும் என்று மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். ஏஏ2ஜி அலைக்கற்றையை பொது ஏலம் விடாமல் முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆ.ராசா தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஒதுக்கீடு செய்ததால் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. அதனால் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் 120-க்கும் மேற்பட்ட உரிமங்களை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில் பார்சிலோனாவில் இந்திய தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தொலைதொடர்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் அமைச்சர் கபில் சிபல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் இந்தாண்டு இறுதிக்குள் 4ஜி அலைக்கற்றையை பொது ஏலம் விடப்படும் என்றார். அதோடுமட்டுமல்லாமல் 2ஜி அலைக்கற்றைக்காக ரேடியோ அலைகள் விற்பனை செய்வது தொடர்பாக திட்டம் இறுதி செய்யப்படும். இந்தாண்டு இறுதிக்குள் 4ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதுதான் எங்களுடைய உள்நோக்கமாகும். அனைவரும் பங்கீடு செய்துகொள்ளும்படி எங்களிடம் போதுமான அளவு அலைக்கற்றை உள்ளது. ரேடியோ அலைகளும் போதுமான அளவுக்கு உள்ளது. அதேசமயத்தில் எல்லா அலைக்கற்றைகளையும் ஒரேநேரத்தில் ஏலம் விடப்படாது. மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சிபாரிசின் அடிப்படையில் ஏலம் இருக்கும் என்று கபில் சிபல் தெரிவித்தார். ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகள் சிக்கலானதோடு கடுமையான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கபில் சிபல் மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |