முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவை வாபஸ் பெற ஹசாரே ஆவேசம்

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 24 - மத்திய அரசின் பயனற்ற லோக்பால் மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா கடந்த குளிர்கால பாராளுமன்றக் கூட்டத்தொடரில் லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராஜ்யசபையில் இது நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் இந்த மசோதாவை இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது ராஜ்யசபையில் நிறைவேற்றிவிடலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்று டெல்லியில் நடைபெற்றது. ஆனால் அதில் ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்த நிலையில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே, மத்திய அரசின் பயனற்ற லோக்பால் மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த மசோதா குறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் இந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. லோக்பால் மசோதாவை அரசு கொண்டுவருமா? கொண்டுவராதா? என்பது எங்களுக்கு தெரியவில்லை. அதனால் இந்த விஷயத்தை நாங்கள் மக்கள் பெருமன்றத்தின் முன்பு கொண்டுபோய் வைக்க உள்ளோம் என்றும் அன்னா ஹசாரே கூறினார். இந்த விஷயத்தை தெரிவிப்பதற்காக நாங்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள லோக்பால் மசோதா பயனற்றது. இது ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்காது. எனவே அப்படிப்பட்ட சட்ட மசோதாவை கொண்டுவருவதில் எந்த புண்ணியமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்