முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோச் சடையான் படத்தில் நடிப்பது ஈசியானதல்ல, சவாலானது- ரஜினிகாந்த் பேட்டி

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, ஏப்.- 2 - கோச்சடையான் படம் வழக்கமான படத்திலிருந்து வேறுபட்டது. இதில் நடிப்பது சவாலானது என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். ரஜினி காந்த்தின் மகள் செளந்தர்யா இயக்கும் இப்படத்தில் ரஜினி, தீபிகாபடுகோன் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் இதில் சரத்குமார், ஜாக்கி ஷெராப் ஷோபனா நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர், கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்யும் இப்படம் 3 டியில் தயாராகிறது. இப்படக்குழுவினர் 17-ம் தேதி படப்பிடிப்புக்காக லண்டன் சென்றனர். இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியானது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் இந்தப்படம் பற்றி குறிப்பிட்டதாவது. இப்படம் வழக்கமான படப் பிடிப்பிலிருந்து மாறுபட்டது. இதில் நடிப்பது ஈ.சி.யானதல்ல, சவாலானது, மேக்கப் காஷ்ட்யூம் எதுவுமில்லாமல் அந்தக் கேரக்டருக்குள் ஒன்றி நடிப்பது கஷ்டமானது. அதை செய்திருக்கிறோம் என்று ரஜினி குறுப்பிட்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்