முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலையை உயர்த்தாவிட்டால் பெட்ரோல் சப்ளையை குறைப்போம்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

நிறுவனங்கள் மிரட்டல் விடுத்துள்ளன. கச்சா எண்ணை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் இந்திய எண்ணை நிறுவனங்கள் தினமும் ரூ.48 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் மட்டுமே ரூ.7.67 இழப்பு ஏற்படுகிறது. தேர்தல் முடிந்து விட்டநிலையில், விலையை உயர்த்த எண்ணை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.  கடந்த 1-ம் தேதி பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு தொடர்ந்து மவுனத்தை கடைப்பிடித்தப்படி உள்ளது.  பெட்ரோல் விலையை உயர்த்தினால், மற்ற அத்தியாவசியப்பொருட்கள் விலை உயர்ந்து விடும் என்று மத்திய அரசு கூறுவதாக தெரிகிறது. எனவே தான் எண்ணை நிறுவனங்கள் தங்களது நிதிச்சுமை பற்றி பல தடவை கூறியும் மத்திய அரசு கண்டும் காணாததும் போல உள்ளது. இது எண்ணை நிறுவனங்களை அதிருப்தி அடையச்செய்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டுமே எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.4500 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு மேலும் வருவாய் இழப்பை தாங்கிக்கொள்ள இயலாது என்று எண்ணை நிறுவனங்கள் கூறியுள்ளன. இழப்பை குறைக்கும் வகையில் பெட்ரோல் சப்ளையை குறைக்கப்போவதாக எண்ணை நிறுவனங்கள் மிரட்டல் விடுத்துள்ளன. 

மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.14.78 வரி வசூலிக்கிறது. மாநில அரசுகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ரூ10 முதல் ரூ.20 வரை வரி விதிக்கின்றன. இந்த வரியை குறைத்தாலே போதும், மக்களுக்கு சுமை ஏற்றாமல் பாதுகாக்க முடியும் என்று எண்ணை நிறுவனங்கள் கூறியுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்