முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.26 - இந்தியா தென் பகுதி மற்றும் மேற்கு பகுதி மட்டுமே கொண்டதாக இருந்திருந்தால் இந்தியா இன்னும் அபார வளர்ச்சியை கண்டிருக்கும் என்ற சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் ஒரு கருத்தைதெரிவித்து இருந்தார். 

தென்பகுதி மற்றும் மேற்குபகுதிகளை மட்டும் கொண்டதாக இருந்திருந்தால் இந்தியா கூடுதலாக வளர்ச்சி பெற்றிருக்கும் என்று சிதம்பரம் கூறியிருந்தார்.

இதற்கு நேற்று பாராளுமன்றத்தின் லோக் சபையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

சிதம்பரத்தின் இந்த பேச்சு தேசிய ஒற்றமைக்கு  எதிரானது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

கடந்த 2009 ம் ஆண்டு அமெரிக்க தூதர் தீமோத்தி ரோமருடன் கலந்துரையாடிய போது சிதம்பரம்  இவ்வாறு குறிப்பிடிருந்ததாக விக்கி லீக் இணைய தளம் குறிப்பிட்டுள்ளது. அந்த இணையதளத்தில் இருந்து இந்த தகவளை முதன் முறையாக எடுத்து  தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. 

இதை அடுத்தே எதிர்க்கட்சிகள் நேற்று இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் கிளப்பின.

உள்துறை அமைச்சராக இருக்கும் சிதம்பரம் இது போன்ற தேச ஒற்றுமைக்கு எதிரான கருத்தை தெரிவித்து இருக்கக்கூடாது என்று சமாஜ்வாடி  கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆட்சேபனை தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மேலும் பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.

இதே போல ராஜ்ய சபையிலும் இந்த பிரச்சினை கிளப்பப்பட்டது.

தேச ஒற்றுமைக்கு எதிராக பேசிய சிதம்பரத்தை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 

இந்த பிரச்சினையால் பாராளுமன்றத்தின் இரு  சபைகளிலும் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்