முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசிபுரம் அருகே பஸ்-லாரி மோதி 5 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

நாமக்கல் ஏப்.15 - ராசிபுரம் அருகே நேற்று அதிகாலை கர்நாடகா மாநில சுற்றுலா பேருந்து முன்னே சென்ற லாரி மீது மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாயினர்.16 பேர் படுகாயம் அடைந்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூர் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் 53 பேர் தமிழகத்தில் உள்ள குணசீலம், சமயபுரம்,திருவாணைக்காவல்,ஸ்ரீ ரங்கம், சுவாமிமலை,கும்பகோணம் உள்ளிட்ட கோவில் நகரங்களை சுற்றிப் பார்க்க கர்நாடக அரசுக்கு சொந்தமான சுற்றுலா பஸ்சில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக புறப்பட்டு வந்தனர். இந்த சுற்றுலாவிற்கு கருணாநிதி(50) என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். நேறறு அதிகாலை 5.10 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே உள்ள புதுச்சத்திரம் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மரச்சட்டங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த கர்நாடகா பஸ் திடீரென எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் பஸ்சின் இடது புறம் பலத்த சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த சுற்றுலா அமைப்பாளர் கருணாநிதி(50), கருணாநிதியின் மகன் நவீன்(25), கருணாநிதியின் அண்ணன் மகள் தனலட்சுமி(24) , தேவன்(35) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போயினர்.

இந்த விபத்தில் உமா(45), கல்பனா(40),சோனியா, அருண்,பெருமாள்(15), ருத்ரமுனியப்பா(50), சுதா(48), ரஷீலா(33), ஹர்சா(13), நாகேஷ்(30), பஸ் டிரைவர் பாபு(41), பிரமீளா(50), மல்லிகா(49), பாலாஜி(55),நிர்மலா(48),புஷ்பா(45) ஆகிய 16 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் உமா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார். படுகாயம் அடைந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பஸ்சில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரியா, நாமக்கல் டி.எஸ்.பி.சுப்பிரமணி, புதுச்சந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் அனந்த ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இந்த விபத்தினால் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்