முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதித்த மாவட்டங்களில் 5 ஆயிரம் மின் இணைப்புகள்

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.27 - மானிய விலையில் சிறுகுழல் விளக்குகள் வழங்கப்படும், மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும், திருநெல்வேலி முதல் சென்னை வரை மின் தொடர் கட்டமைப்பு அமைக்கப்படும், காற்றாலை மின் சக்திக்கு தனிப்பாதை அமைக்கப்படும் புயல் பாதித்த மாவட்டங்களில் புதிதாக 5 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.மின்துறை மானியக்கோரிக்கை சட்டசபையில் சமர்ப்பித்து அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ரூ.85.00 கோடி செலவில் பலகட்டங்களாக வீட்டு மின் நுகர்வோருக்குக் குமிழ் விளக்குகளுக்குப் பதிலாக ஒரு கோடி சிறு குழல் விளக்குகளை அடக்கவிலையான ரூ.100 ஐக் காட்டிலும், ஒன்று ரூபாய் 15 வீதம் மானிய விலையில் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் 60 கிலோவாட் மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்று முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் அமைக்கப்படும்.

பல கட்டங்களாக மின் இணைப்புகளில் தானியங்கி மின்னளவிகளைப் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக அனைத்து உயரழுத்த மின் இணைப்புகளிலும் தானியங்கி மின்னளவிகள் பொருத்தப்படும்.

2012-13 -ஆம் ஆண்டில், ரூபாய் 1868.59 கோடி முதலீட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குத் திறம்பட மின்சாரத்தைக் கொண்டு செல்ல 400 கிலோவோல்ட் உயர்திறன் கொண்ட மின்தொடர் கட்டமைப்பு (இருபாதை) திருநெல்வேலி முதல் கயத்தாறு, காரைக்குடி புகளூர் மற்றும் சிங்காரப் பேட்டை வழியாக சென்னை வரை அமைக்கப்படும். மேலும் 60 துணை மின் நிலையங்களும் மற்றும் அதனோடு சேர்ந்த மின் பாதையும், சுமார் 2500 மின் சுற்று கிலோ மீட்டர் அளவில் உயரழுத்த மின்பாதை மேம்பாடு, மின்சாரத்தைக் கொண்டு செல்ல மின்பாதை மற்றும் இணைப்பு மின்பாதையும், 120 உயர் அழுத்த மின் மாற்றிகள் கூடுதல் திறனுடனும் / திறன் உயர்த்தியும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

காற்றாலை மின் நிலையங்களிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிக்கொணர தப்பக்குண்டு, ஆனைக்கடவு மற்றும் ராசிபாளையம் ஆகிய இடங்களில் 400 கிலோவோல்ட் புதிய துணை மின்நிலையங்களும் அதனோடு சேர்ந்த 336 மின் சுற்று கிலோ மீட்டர் நீளத்திற்கு 400 கிலோவோல்ட் உயர் மின்னழுத்தப் பாதையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் துணை மின் நிலையங்கள் சேலத்தில் இந்திய மின் தொடரமைப்புக் கழகம் (டஎஇஐக) மூலம் அமைக்கப்படவுள்ள 765 கிலோவோல்ட் துணை மின்நிலையத்துடன் இணைக்கப்படும் மற்றும் மின்நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஒரு மத்திய மின்சுமை பகிர்ந்தளிப்பு மையம் ஏற்படுத்தப்படும்.

இம்மையம் காற்றாலை மின் உற்பத்தியை உடனுக்குடன் கண்காணித்து தெளிவான வழிகாட்டுதலை வழங்கும்.

ாதானோ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கூடுதலாக 5000 விவசாய மின் இணைப்புகள் இந்த வருடத்தில் வழங்கப்படும்.

புயலால் பாதிக்கப்படும் கடலோர நகரங்களில் மின்தடை சீரமைப்பைத் துரிதப்படுத்த உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளை, புதைவடங்களாக மாற்றும் பணி ரூபாய் 490 கோடி உத்தேச மதிப்பில் பல கட்டங்களில் மேற்கொள்ளப்படும்.

விவசாய மின் பயனீட்டாளர்கள் மின்திறன் மேம்படுத்துதலைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக தேர்தெடுக்கப்பட்ட ஒரு மின்னூட்டியில் நட்சத்திரக் குறியீட்டுடன் கூடிய திறன் வாய்ந்த மின்சார பம்ப்புசெட்டுகளைப் பொருத்தும் செயல்விளக்கத் திட்டம் முன்னோடியாக நடைமுறைப்படுத்தப்படும்.

புதிய விவசாய மின் இணைப்புகள் கொடுக்கப்படும் போது எரிசக்தித் திறனுடைய விவசாய பம்ப்புசெட்டுகள் அமைப்பது கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்