Idhayam Matrimony

எனக்குஎதிராக அவதூறு பரப்பும் தருமபுரம் ஆதீனம்மீதுவழக்கு தொடரப்படும்

வியாழக்கிழமை, 3 மே 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 3 - எனக்கு எதிராக அவதூறு பரப்பும் தர்மபுரம் ஆதீனம் மடம் முன்பு தொடர் உண்ணாவிரதம் மற்றும் வழக்கு பதிவு தொடரப்படும் என்று மதுரை இளைய ஆதீனம் நித்தியானந்தா நேற்று மதுரையில் தெரிவித்தார். மதுரையில் நேற்று இளைய ஆதீனம் நித்யானந்தா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தருமபுர ஆதீனம் மற்றும் திருப்பனந்தாள் ஆதீனம் சேர்ந்து என் மீதும் மதுரை ஆதீனம் மீதும் அவதூறு பரப்பும் விதமாக சில செய்திகள் வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் என்னிடம் எந்தவொரு தன்னிலை விளக்கம் கேட்காமலேயே அவதூறு பரப்பி இருப்பது வருந்தத்தக்கதாகும். என்னிடம் விளக்கம் கேட்டு அந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால், நான் ஆதீனம் பொறுப்பை ராஜினாமா செய்து இருப்பேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கப்படவில்லை. கொலை குற்றவாளிக்கு கூட ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனக்கு அந்த வாய்ப்பு கூட தரப்படவில்லை. சைவவேளாளர் குலத்தை சேர்ந்தவர் தான் மதுரை ஆதீனமாக வர முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் அதே வகுப்பைச் சேர்ந்தவன்தான். தொண்டை மண்டல முதலியார் வகுப்பை சேர்ந்தவன்.(அந்த சமயத்தில் அருகில் இருந்த மதுரை ஆதீனம் குறுக்கிட்டு 289, 290 -வது சன்னிதானங்கள் உள்பட 7 சன்னிதானங்கள் தொண்டை மண்டல முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனவே நித்யானந்தாவுக்கு மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்க தகுதி உள்ளது என்றார்). தொடர்ந்து நித்யானந்தா கூறியதாவது:பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும்  என் மீது வழக்கு இருக்கிறதாக குற்றம் சாட்டுகிறார்கள். பொதுவாழ்க்கையில் ஈடுபடும் யார் மீதுதான் வழக்கு இல்லை? நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 3 லட்சம் கற்பழிப்பு வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விசித்தரம் என்னவென்றால் என் மீது யாரும் புகார் கொடுக்காமலேயே  கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  என் மீது தொடரப்பட்ட வழக்கு மத தாக்குதலாகும். இந்து மதத்திற்கும் சைவ சமயத்திற்கும் அரும்பணி ஆற்றி வருகிறேன். பல புத்தகங்கள் மூலமும்கிந்து மதத்தை பரப்பி வருகிறேன். இப்படி சேவை செய்கிற எனக்கு ஆதீனங்கள் உறுணையாக இருக்கவேண்டும் மாறாக அவதூறு பரப்புவது வேதனை அளிக்கிறது.   புகழுக்காகவோ சொத்துக்காகவோ மதுரை ஆதீன பொறுப்பை நான் ஏற்கவில்லை. இப்போது பத்திரிக்கைகள் மூலம் ஒரு உறுதி அளிக்கிறேன். மதுரை ஆதீனம் சொத்தை விற்கவோ, இழப்பு ஏற்படுத்தவோமாட்டேன். சொத்தை மேலும் வளர்க்கத்தான் பாடுபடுவேன். ஆதீனங்கள் அறிவித்துள்ள தீர்மானத்தால் என் தியான பிட சீடர்கள் மனவேதனைக்குள்ளாகி  கொதித்து போய்உள்ளார்கள்.
தீர்மானங்கள் மீது கையெழுத்திட்ட ஆதீனங்கள் மீது எங்கள் நித்யானந்தா பீடத்தை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள். ஆதீனங்கள் மீது மதம் தொடர்பான  வழக்கு தொடர அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு ரத்த கையழுத்திட்டு  வேண்டுகோள் கடிதம் எழுத உள்ளோம்.  மதுரை ஆதீனமாக பொறுப்பேற்பவர்கள் தலைமுடி வைத்திருக்க கூடாது என்கிறார்கள். இந்து மதத்தில் தலைபோக கூடிய விஷயம் எவ்வளவோ இருக்கும் போது எனது  தலைமுடி பெரிய பிரச்சினை இல்லை. எனக்கு எதிராக ஆதீனங்கள் நிறைவேற்றி உள்ள தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும். தருமபுரம் ஆதீனம் முன்பு என் சீடர்கள்  தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறார்கள். மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள எனக்கு சில அரசியல் கட்சிகளும் 40 இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்