முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்துடனான ஒப்பந்தங்களில் குறைபாடுகள் நீக்கப்படும்: இந்தியா

திங்கட்கிழமை, 7 மே 2012      இந்தியா
Image Unavailable

டாக்கா,மே.- 7 - வஙகதேசத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அது கலையப்பட்டு செயல்படுத்தப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவுக்கும் அண்டைநாடான வங்கதேசத்திற்கும் இடையே வர்த்தகம், பொருளாதாரம், நதிநீர் பங்கீடு மின்சார உற்பத்தி திட்டம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தகளில் இருநாடுகளிடையே எல்லைப்பகுதியில் உள்ள திபைமுஹ் அணையில் நீர்மின்சாரம் உற்பத்தி செய்து அதை இருநாடுகளும் பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் சில குறைபாடுகள் உள்ளதாக வங்கதேசம் கூறி வருகிறது. அதனால் அந்த ஒப்பந்தம் இன்னும் செயல்படுத்தப்பட முடியாமல் இருக்கிறது. அதனால் இந்த ஒப்பந்தம் உள்பட மேலும் பல ஒப்பந்தங்களில் குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுவது குறித்து இருநாடுகளிடையே ஒரு துணைக்கமிட்டி அமைத்து அந்த குறைபாடுகளை ஆய்வு செய்து நீக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்து வங்கதேசத்திற்கு சென்றிருந்த இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி,அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து பேசியபோது தெரிவித்தாக பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்