முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.மு.கூட்டணி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது

செவ்வாய்க்கிழமை, 8 மே 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.- 8 - மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது என்று பாரதிய ஜனதா கடுமையாக குற்றஞ்சாட்டியது. பாராளுமன்ற ராஜ்யசபையில் நேற்று கேள்வி நேரத்திற்கு பின்னர் பாரதிய ஜனதா உறுப்பினர் ராஜீவ் பிரதாப் ரூடி பேசினார். அப்போது அவர் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை கடுமையாக குற்றஞ்சாட்டி பேசினார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பட்டினி, ஏழ்மை தலைவிரித்தாடுகிறது. இதை தடுத்து நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. ஏழ்மையும் வன்முறையும் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுகிறதா? அல்லது இல்லையா? என்ற கேள்வி எழுகிறது என்றும் பிரதாப் ஆவேசமாக கூறினார். நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகிப்போய்விட்டது. இதை தடுக்க மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் ரூடி கூறினார். என்எஸ்எஸ்ஓ எடுத்த ஆய்வு அறிக்கையில் நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது. கடந்த 2000-2005-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு 6 மில்லியனாக இருந்தது. இது 2005-10-ல் 2 மில்லியனாக குறைந்துவிட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது வேதனை அளிக்கும்படியும் உள்ளது என்று ரூடி மேலும் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்