முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை இடைத் தேர்தல் களத்தில் 20 பேர்

புதன்கிழமை, 30 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

புதுக்கோட்டை, மே. 30  - புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளன்று 5 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றதை தொடர்ந்து இறுதியாக 20 பேர் களத்தில் உள்ளனர்.  ஜூன் 12 ல் நடைபெறவுள்ள புதுக்கோட்டை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 31 பேர் சார்பில் மொத்தம் 34 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளான நேற்று முன்தினம் தேர்தல் பார்வையாளர் பிரேம்சிங் மெஹ்ரா தலைமையில் நடைபெற்ற இறுதி கட்ட பரிசீலனையில் அ.தி.மு.க. போட்டி வேட்பாளர் ரவிசந்திரன், ரஜினி மன்ற செயலர் ஸ்ரீதர், சுயேட்சைகள் கோமதிசங்கர், ஆறுமுகம், சத்தியமூர்த்தி ஆகிய 5 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றனர். 

இதையடுத்து புதுக்கோட்டை இடைத் தேர்தல் களத்தில் அ.தி.மு.க, தே.மு.தி.க. ஐ.ஜே.கே. ஆகிய கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 20 பேர் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு அவரவர்களுக்கான சின்னங்களும், ஐ.ஜே.கே. வேட்பாளருக்கு மோதிரம், மக்கள் மாநாட்டு கட்சிக்கு தேங்காய், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கு 3 நட்சத்திரம் சின்னம் மற்றும் மீதமுள்ள 15 வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 16 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்குப் பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும். இத் தேர்தல் களத்தில் 20 பேர் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்