முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பக்தர்கள் 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

புதன்கிழமை, 30 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, மே 29 - திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பாத யாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அமைப்பு பல்வேறு சிறப்பு வசதிகளை செய்துவருகிறது. இதில் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசம் செய்ய கோவிலின் முன்பகுதியில் சிறப்பு தரிசன வரிசை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையானை பாதயாத்திரை சென்று தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறப்பு தரிசன வழியில் பெரும் நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் 10 பேர் மயக்க மடைந்து விழுந்தனர். இதனால் தேவஸ்தான நிர்வாகம் பாதயாத்திரை பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் கூறும்போது, இனிமேல் 22 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே பாதயாத்திரையாக வர அனுமதிக்கப்படுவார்கள். மீதம் உள்ளவர்கள் திருப்பதி மலையின் கீழ் பகுதியில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இதன் மூலம் சிறப்பு தரிசன வரிசையில் கூட்ட நெரிசல் குறைக்கப்படும். கோடை விடுமுறை விடுமுறை தினங்கள் என்பதால் திருப்பதி தேவஸ்தானத்தில் கூட்ட அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்