முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 கோடி லஞ்சம் வாங்கிய நீதிபதி கைதாகிறார்

சனிக்கிழமை, 2 ஜூன் 2012      ஊழல்
Image Unavailable

 

ஐதராபாத், ஜுன் 3 - கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை ஜாமீனில் விட ரூ. 5 கோடி லஞ்சம் வாங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நீதிபதியை கைது செய்ய சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஓபுளாபுரத்தில் உள்ள சுரங்க நிறுவனம் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக சி.பி.ஐ.க்கு புகார் வந்தது. இதை விசாரணை செய்த சி.பி.ஐ. கடந்த ஆண்டு ஜனார்த்தன ரெட்டியை கைது செய்தது. அவரது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. கோர்ட் தள்ளுபடி செய்தது. நான்கு முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 12 ம் தேதி அவருக்கு ஐதராபாத் சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி பட்டாபிராமாராவ் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதற்கு சி.பி.ஐ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் சி.பி.ஐ.அதிகாரிகள் மத்தியில் இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் நீதிபதியின் வங்கிக் கணக்கையும் அவரது உறவினர்கள் வங்கிக் கணக்கையும் ஆய்வு செய்தனர். இதில் நீதிபதியின் மகன் வங்கிக் கணக்கில் ரூ. 3 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஜனார்த்தன ரெட்டியை ஜாமீனில் விட இடைத்தரகர்கள் ரூ. 5 கோடி எடுத்துக்கொண்டது போக மீதம் ரூ. 5 கோடியை நீதிபதிக்கு கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மதன் லோகூரிடம் சி.பி.ஐ. தரப்பில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி, பட்டாபி ராமாராவை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிபதி பட்டாபி ராமாராவ் விரைவில் கைதாவார் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்