முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்தவ மத போதகர் தலையில் கல்லை போட்டு கொலை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.3 - மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரம் அருகே உள்ள 4வழிச்சாலையில் நேற்றுகாலை ஒரு மோட்டார் சைக்கிள் அனாதையாக கிடந்தது. அதன் அருகில் சுமார் 50வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஒத்தக்கடை  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணத்தின் சட்டைபையில் இருந்தவகளை எடுத்து விசாரித்தனர். அப்போது அவரது பையில் டிரைவிங்லைசென்சு இருந்தது. அதில் அவரது பெயர் வில்சன்(54) என்றும் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டு இருந்தது. கொலையுண்ட வில்சன் கிறிஸ்தவ மத போதகராக இருந்துள்ளார். இவர் மாவட்டம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சென்று பிரசங்கம் செய்துள்ளார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட வில்சன் பிரசங்கத்தை முடித்துக்கொண்டு மதுரை திரும்பியுள்ளார்.அவரை வழிமறித்த மர்ம ஆசாமிகள் பணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கொலை குறித்து ஒத்தக்கடைபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago