முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி தெலுங்கானாவை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது:

திங்கட்கிழமை, 11 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

வாரங்கல், ஜூன் - 11 - தனித் தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  எந்த  கட்சியுடனும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைக்காது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். இடைத்தேர்தலையொட்டி வாரங்கல் மாவட்டத்தில  நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் பேசினார். அப்போது, தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகியவற்றுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டணி வைத்திருக்கிறது. 2 எம்.பி.க்களை மட்டுமே வைத்திருக்கக் கூடிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியால் தனி மாநில கோரிக்கையை அடைந்துவிட முடியாது. தனித் தெலுங்கானாவை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் பா.ஜ.க. போன்ற தேசியக் கட்சியுடன் இணைந்து நின்றால் மட்டுமே தெலுங்கானா கோரிக்கை சாத்தியமாகும். பாரதிய ஜனதா போன்ற தேசியக் கட்சி ஒன்றின் ஆதரவு இல்லாமல் எப்படி தனித் தெலுங்கானாவை அமைக்கப் போகிறோம் என்பதை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மக்களுக்கு விளக்கியாக வேண்டும். கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9- ந் தேதி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியையும் அவர் குற்றம் சாட்டினார்.                                                           

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்