எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜுன் - 19 - பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் 10 நாட்களில் வழங்கப்படும் என்று போக்குவரத்துதுறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் பெரும் பயனடைந்து வருகிறார்கள். மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இதுவரை சென்னையில் மட்டுமே இருந்துவந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் இம்முறை தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த பணிகள் முடிவடைந்து ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்படும். இதில் எந்தவித தாமதமும் இல்லை. எப்பொழுதும் பள்ளிகள் தொடங்கி மூன்றாவது வாரத்திலேயே பஸ் பாஸ்கள் வழங்கப்படும். அதுபோலவே இம்முறையும் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |