முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையிலிருந்து சர்வதேச விமான சேவை விரைவில் துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 26 - மதுரையிலிருந்து விரைவில் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,  மதுரையில் விரைவில் சர்வதேச சேவை தொடங்கப்படும். முதலாவதாக, மதுரையில் இருந்து கொழும்புக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவையைத் தொடங்க அனுமதி அளித்துள்ளோம். மதுரையில் இருந்து கொழும்புக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். படிப்படியாக இது மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறைப்படியே இண்டிகோ, ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களுக்குப் புதிய வழித்தடத்தில் சேவையைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அஜீத் சிங்.

சென்னை விமான நிலைய விரிவாக்கம் குறித்து கூறிய அவர், விமான நிலையத்தின் வருவாயில் 46 சதவீதம் இந்திய விமான நிலைய ஆணையத்தின் வசம் உள்ளது. சென்னை விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கும் திட்டத்துக்கு மத்திய திட்டக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். விமான நிலையத்தைத் தனியார்மயம் ஆக்குவது சிறந்த தீர்வாக இருக்கும்.

விமான நிலையம் என்பது விமானங்களுக்கான நிறுத்தம் மட்டும் கிடையாது. அங்கு வரும் பயணிகளுக்கு வேண்டிய வசதிகள், தங்குமிடம், வாகன நிறுத்துமிடம், உணவகம், ஓய்வறை போன்ற கட்டமைப்புகளைக் கொண்ட இடமாக இருக்க வேண்டும். இத்தனைப் பணிகளை விமான போக்குவரத்துத் துறையால் செய்ய முடியாது என்றார்.

மேலும் தூத்துக்குடி, சேலம் போன்ற சிறிய விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். விமான சேவை மேம்பட வேண்டுமானால், பெருநகரங்கள் அல்லாத இடங்களிடையே விமான சேவை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்