வடகிழக்கு மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

கவுஹாத்தி, ஜூலை.- 2- அசாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்படடது.  அசாம் மாநிலத்தில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் தொடர் மழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அம்மாநிலத்தின் 23 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கினால் 61 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உலகிலேயே மிகப் பெரிய நன்னீர்தீவு என்று அழைக்கப்படும் பிரம்மபுத்திரா நதிக்கு நடுவே உள்ள மஜூலி தீவை மையமாகக் கொண்டு நேற்று காலை 9.45 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டராக பதிவாகி இருந்தது. அசாம் மாநிலத்தின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அசாமின் அண்டை மாநிலமான மேகலாயா மற்றும் மணிப்பூரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய அளவிலான சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: