முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டி நீலகிரி அணிக்கான வீரர்கள் தேர்வு

திங்கட்கிழமை, 2 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, ஜூலை.- 2 - முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நீலகிரி மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில அளவில் நடைபெறும் தமிழக முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு நீலகிரி மாவட்ட அணிக்கான தேர்வு போட்டிகள் கடந்த மாதம் நடத்தப்பட்டன. தமிழக அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஊட்டியிலுள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கலந்து கொண்டு கால்பந்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவசங்கரன், நீலகிரி கால்பந்து சங்க துணைத்தலைவர் பால நந்தகுமார், ரமேஷ், பொருளாளர் மணி, பயிற்சியாளர் செந்தில், செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago