முதல்வர் சதானந்தாவை மாற்ற பா.ஜ.க. முடிவு 9 அமைச்சர்கள் ராஜினாமா வாபஸ்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,ஜூலை.- 3 - முதல்வர் சதானந்த கவுடாவை மாற்ற பா.ஜ.க. மேலிடம் உறுதி அளித்துள்ளதையொட்டி 9 அமைச்சர்களும் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதனையொட்டி கர்நாடக மாநிலத்தில் நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.  கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா முதல்வர் சதானந்த கவுடாவுக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் தலைமையில் இரு கோஷ்டிகள் பிரிந்து முதல்வர் சதானந்த கவுடாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மேலும் கவுடாவுக்கு எதிராக 9 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். அதோடுமட்டும் நில்லாமல் வரும் 5-ம் தேதிக்குள் சதானந்த கவுடா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 51 எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகுவார்கள் என்றும் ஷெட்டர் கெடு விதித்தார். இதனையொட்டி முதல்வர் சதானந்த கவுடாவை இன்னும் ஒருசில நாட்களில் மாற்ற பா.ஜ. மேலிடம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனையொட்டி ராஜினாமாவை அந்த 8 அமைச்சர்களும் வாபஸ் பெற்றுக்கொண்டனர். ராஜினாமா செய்த நாங்கள் 9 அமைச்சர்களும் எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் பணிக்கு திரும்புகிறோம். கர்நாடக அரசியல் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை நோக்கி செல்கிறோம் என்று ராஜினாமா செய்த அமைச்சர்களில் ஒருவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். கர்நாடக மாநில பா.ஜ.க. அதிருப்தி கோஷ்டியினர்களின் கோரிக்கையை நாங்கள் ஏற்க மறுக்கவில்லை. அவர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அனைத்து தரப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில பா.ஜ.க. அரசியல் விவகாரத்தை கவனிக்கும் தர்மேந்திர பிரதான் நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை கட்சி மேலிடம் நன்றாக புரிந்துகொண்டுள்ளது. கட்சி மேலிடத்துடன் விரிவான முறையில் விவாதித்த பின்னர் ராஜினாமா செய்த அமைச்சர்கள் வாபஸ் பெற்றுள்ளனர் என்றும் பிரதான் மேலும் கூறினார். இதற்கிடையில் முதல்வர் சதானந்த கவுடா நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு பா.ஜ. தலைவர்களை அவர் சந்தித்து பேசுவார். மேலும் நதீன்கட்காரி மகன் திருமணத்திலும் சதானந்த கவுடா கலந்துகொள்வார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: