வி.ஐ.பிக்களுக்கான கறுப்பு பூனைப்படை வாபஸ்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. - 3 - என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு படை(கறுப்பு பூனைப்படை) தனது 900 கமாண்டோக்களை வி.ஐ.பிக்களுக்கான பாதுகாப்பு பணியில் இருந்து வாபஸ் பெற தீர்மானித்துள்ளது. அதற்கு பதிலாக தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளது.  கறுப்பு பூனைப் படை 1984 ல் உருவாக்கப்பட்டது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இது அமைக்கப்பட்ட போதிலும் உயிருக்கு ஆபத்து நிறைந்த வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. இப்படையின் வீரர்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரிவிலும் 900 பேர் இடம் பெற்றிருந்தனர்.  இந்நிலையில் என்.எஸ்.ஜியின் இயக்குனராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ராஜன் கே. மேதேகர் ஒரு புதிய செயல் திட்டத்தை உருவாக்கினார். அத்திட்டப்படி இப்படையின் 11 வது பிரிவை வி.ஐ.பி. பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்து தீவிரவாத எதிர்ப்பு மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இப்படையின் புதிய இயக்குனராக பொறுப்பேற்ற சுபாஷ் ஜோஷி இதை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.  இப்போது பாதுகாப்பு அளிக்க வேண்டிய வி.ஐ.பிக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தனது கமாண்டோக்களை மீண்டும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது என்.எஸ்.ஜி.யின் பாதுகாப்பு 15 வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வி.ஐ.பி. பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்து தீவிரவாத எதிர்ப்பு பணிகளுக்கு இப்படையில் வீரர்கள் பயன்படுத்தப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும்.
 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: