முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பியூன் வாங்கிய பிளாட்டின் மதிப்பு ரூ.60 லட்சம்...!

சனிக்கிழமை, 28 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

 

மும்பை.ஜூலை.28  - ஒரு பியூனின் மாதச்சம்பளம் ரூ. 9000 .  ஆனாள் அவர்  ஆதர்ஷ் குடியிருப்பில் ரூ.60 லட்சத்திற்கு பிளாட் வாங்கியிருக்கிறார்.  இது ஆதர்ஷ் ஊழல்  குறித்த  விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கொலாபர் பகுதியில்  கார்கில் போர் தியாகிகள் குடும்பத்திற்காக  ஆதர்ஷ் என்ற பெயரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டது.

இந்த குடியிருப்பில்  பல கோடிக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

இந்த ஊழல் புகார் குறித்து விசாரிக்க நீதிபதி  ஒருவர்  தலைமையில் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழு நடத்திய விசாரணையில்  மாதம் ரூ.9,000 சம்பளம் வாங்கும்  பியூன் ஒருவர் இந்த  ஆதர்ஷ் குடியிருப்பில்  ரூ. 60 லட்சத்திற்கு வீடு வாங்கியிருக்கிறார்.

என்பது  தெரியவந்துள்ளது. 

சுரேஷ் அத்ராம் என்ற இந்த 62 வயது  நபர் எஸ்.எம்.எஸ்.  இன்ப்ராஸ்ரக்சர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். சஞ்செட்டி குடும்பத்தினரால்  நடத்தப்படும்  சான் பைனான்ஸ்  கார்ப்பரேஷனில்  கடன் வாங்கி இந்த வீட்டை  அத்ராம் வாங்கியிருக்கிறார்.

ஆதர்ஷ் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திலக் என்பவரிடம் இருந்து  இதற்கான விண்ணப்பத்தை  நாக்பூரில் வைத்து  தான் வாங்கியதாக  அத்ராம் ஒப்புக்கொண்டார்.

தான் மும்பைக்கு போனதேயில்லை என்றும்  விண்ணப்பம் கொடுத்த பிறகும் கூட தான் ஆதர்ஷ்  குடியிருப்பை  பார்க்கவே இல்லை என்றும்  அத்ராம்  கூறினார்.

இந்த  ஆதர்ஷ் பிளாட்டை வாங்க  தனது மாதச்சம்பளத்தை  ரூ. 13,500  என்று  போலி  சட்டிபிகேட் கொடுத்து  வீட்டு கடன் வாங்கியதாகவும் தனக்கு   வாய்மொழி வேண்டுகோளின் தான்ஹ  கேட்ட ரூ.20 லட்சத்திற்கு மேல் ரூ. 59.50 லட்சம்  தனக்கு  கடனாக கிடைத்ததாகவும் அவர்  கூறினார்.

எஸ்.எம்.எஸ். இன்ப்ராஸ்ரக்சர் கம்பெனியில்  ரூ. 35,000 மாதச்சம்பளத்தில் டிரைவராக வேலை பார்த்த மட்கே என்பவர் அளித்த வாக்குமூலத்தில்  தான் ரூ. 60 லட்சத்தில் ஆதர்ஷ் குடியிருப்பில் பிளாட் வாங்கியதாக ஏற்கநவே கூறியுள்ளார்.

இது போல ஆதர்ஷ் குடியிருப்பில் பிளாட்டுகளை வாங்கியிருப்பவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை கமிஷன்  விசாரணை நடத்தி வருகிறது.  இந்த விசாரமையில் புதுப்புது தகவல்கள்  கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்