முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டாவிட்டால் தமிழகம் ஒரு போதும் தப்பிக்காது மதுக்கூர் ராமலிங்கம்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், ஏப்.- 4 - கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டாவிட்டால் தமிழகம் ஒரு போதும் தப்பிக்காது என அ.தி.மு.க வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மதுக்கூர் ராமலிங்கம் எச்சரிக்கை விடுத்து பேசினார். திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சி.பி.எம்.தாலுகா செயலாளர் ஆண்டவர் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் அய்யாவு முன்னிலை வகித்தார். தாலுகா குழு உறுப்பினர் முத்துகாளை வரவேற்றுப்பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன், சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் வதுக்கூர் ராமலிங்கம் பேசியதாவது, அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தலைநகர் சென்னையை விட்டு, தோல்வி பயத்தால் தி.மு.க. தலைவர்கள் வெளியேறிவிட்டனர். தி.மு.க. வின் தோல்வி கமக்கு திருவாரூரிலிருந்து தாந் ஆரம்பிக்கும். தமிழகத்தின் ம்கவும் பதற்றமான இடமாக சத்தியமூர்த்தி பவன் மாறிவிட்டது. கட்டிய மனைவியை ஏமாற்றி மயிலாப்பூர் சீட்டை தட்டிப்பறித்தவர் தங்கபாலு. அ.தி.மு.க. கதாநாயகர்கள் கூட்டணி, தி.மு.க.வோ காமெடியந்கள் கூட்டணி. தி.மு.க. வின் தேர்தல் அறிக்கை கதாநாயகி என கருணாநிதி கூறி வருகிறார். தி.மு.க.விற்கு வில்லன் கரண்ட் கட் தான் என்பதை கருணாநிதி மறந்து விட்டார். தற்போது மின்வெட்டு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மின்சார கம்பிகளும் மக்கள் துணி காயப்போடும் கொடிகலாக மாறிவிட்டது. மொத்தத்தில் கருணாநிதியிந் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டாவிட்டால் தமிழகம் ஒருபோதும் தப்பிக்காது என்று பேசினார். இக்கூட்டத்தில் அ.தி.மு.க. நகரச்செயலாளர் ஜே.டி.விஜயன், ஒன்றியச்செயலாளர் செளடார்பட்டி பாண்டி, தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகரச்செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் கருத்தகம்ணன், சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய தலைவர் பத்மநாபன், நகரச்செயலாளர் முருகேசன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஜ்மீர் அலி, நகரச்செயலாளர் ஜெயினுலாப்தீன் மற்றும் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் சுப்புக்காளை, நாராயணன், முத்துராமன், பாண்டிச்செல்வி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!