முக்கிய செய்திகள்

மதுரையில் நடிகர் கார்த்திக் உண்ணாவிரத போராட்டம்

karthik-2

 

மதுரை, பிப்.21 - மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்டக்கோரி நடிகர் கார்த்திக் நேற்று மதுரையில் உண்ணாவிரதம் இருந்தார். 

நாடாளும் மக்கள் கட்சி சார்பில் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்டவேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அடுத்த கீழக்குயில்குடி கிராமம் நான்குவழிச் சாலை பகுதியில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்திற்கு கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் தலைமை வகித்தார். மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.முத்துராமலிங்கம், சமத்துவ மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: