முக்கிய செய்திகள்

பணபலத்தை வைத்து வாக்காளர்களை ஏமாற்ற முடியாது அருண்ஜெட்லி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      தமிழகம்
arjun jettly

 

சென்னை, ஏப்.- 5 - நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பணபலம் எடுபடாது. பணபலத்தை வைத்து வாக்காளர்களை ஏமாற்ற முடியாது.  மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள் என அருண்ஜெட்லி கூறினார். பா.ஜ.க. மூத்த தலைவர் அருண் ஜெட்லி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களுடைய நம்பிக்கையை இழந்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பல ஊழல்கள், மோசமான நிர்வாகம் ஆகியவற்றின் காரணமாக மக்கள் மத்திய அரசு மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள். காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. அரசு நாட்டின் வரலாற்றிலேயே மோசமான ஊழல்கள் நிறைந்த அரசாக திகழ்கிறது. இந்த இரு அரசுகள் மீதும் மக்கள் மிகவும் கோபமாக உள்ளனர். 

வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கட்சிகள் தோற்பது உறுதி. வருகிற தேர்தலிலும் பணபலத்தின் மூலம் ஜெயித்துவிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், வாக்காளர்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. இந்த தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க.வையும், காங்கிரசையும் கண்டிப்பாக தோற்கடிப்பார்கள். இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: