முக்கிய செய்திகள்

சினிமா தொழில் நசிவுக்கு கருணாநிதி குடும்பமே காரணம் ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      தமிழகம்
J RAMAKRISHNAN (E Com   ) 4

 

சிதம்பரம், ஏப்.- 6 - தமிழகத்தில் சினிமா தொழில் நசிவுக்கு முதல்வர் கருணாநிதி குடும்பமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில குழு செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சிதம்பரம் தொகுதி கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் மேலும் பேசியதாவது, 

தமிழகம் மட்டுமின்றி மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி செயல்பாட்டினால் உயர்ந்த விலைவாசி உயர்வு குறித்து கருணாநிதி ஏதாவது கேட்டுள்ளாரா? தற்போது பிரச்சாரத்தில் விலைவாசி உயர்வு பற்றி அவர் பேசுவது கிடையாது. தமிழகத்தில் குடும்ப ஆதிக்க ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அரசியலில் மட்டுமல்லாது, சினிமா துறையிலும் ஆதிக்கம். தமிழகத்தில் தற்போது 65 படங்கள் எடுக்கப்பட்டு வெளியிட முடியாமல் பெட்டிக்குள்ளேயே உள்ளது. இதற்கு கருணாநிதி குடும்பம்தான் காரணம். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?

நாங்களும் போராட்டத்தின்போது அதிகாரிகளை திட்டுவோம். போலீஸ் அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். ஆனால் தேர்தல் என்று வரும் போது நேர்மையாக சட்டத்தை மதித்து செயல்படுவோம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: