முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் கிரிக்கெட் டெஸ்ட்போட்டி ரோஸ்டெய்லர் சதத்தால் நியூசிலாந்து வலுவான நிலை

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர், செப். - 1 - இந்திய அணிக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்று வரும் 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்னை எடுத்து உள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் கேப்டன் ரோ ஸ் டெய்லர் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. அவர் சதம் அடித்தது நேற் றைய ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். தவிர, துவக்க வீரர் குப்டில் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான வா ன் விக் ஆகியோரும் அரை சதம் அடித் தனர். அவர்களுக்கு பக்கபலமாக பிளைன் மற்றும் பிரேஸ்வெல் ஆகியோர் ஆடினர். இந்திய அணி சார்பில் பிரக்ஞான் ஓஜா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தி னார். அஸ்வின் மற்றும் ஜாஹிர்கான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ் டில் நியூசிலாந்து அணி இந்திய சுழற் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண றியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
ஐதராபாத் டெஸ்டின் 2 இன்னிங்சிலும் அந்த அணி மோசமாக ஆடி குறைந்த ஸ்கோரில் ஆட்டம் இழந்தது. இதனா ல் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. எனவே நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்த டெஸ்டில் கவனமாக ஆடினர். சுழற் பந்து வீச்சை ஒரு வழியாக சமா ளித்து ஆடி ரன் எடுத்து உள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூரி ல் உள்ள சின்னசாமி அரங்கத்தில் நேற் று துவங்கியது. இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் குப்டில் மற்றும் மெக்குல்லம் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 81.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன் னை எடுத்தது.
கேப்டன் ரோஸ் டெய்லர் 127 பந்தில் 113 ரன்னை எடுத்தார். இதில் 16 பவுண்டரியும், 2 சிக்சரும் அடக்கம். இது டெ ஸ்ட் போட்டியில் அவருக்கு 7 -வது சத மாகும். தவிர, துவக்க வீரர் குப்டில் 79 பந்தில் 53 ரன்னையும், பிளைன் 53 பந்தில் 33 ரன் னையும், வில்லியம்சன் 17 ரன்னையும் எடுத்தனர். கீப்பர் வான் விக் 85 பந்தில் 63 ரன்னுடனும், பிரேஸ்வெல் 61 பந்தி ல் 30 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக துவக்க வீரர் குப்டில் மற்று ம் பிளைன் இருவரும் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். இதனை பின்பு வந்த வீரர்கள் நன்கு பயன்படுத்தியதால் அந்த அணி கெளர வமான ஸ்கோரை எட்டியது. நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 89 ரன்னிற்கு 3 விக்கெட்டை இழந்து தடு மாறிக் கொண்டு இருந்தது. பின்பு கே ப்டன் டெய்லர் மற்றும் பிளைன் இருவ ரது ஆட்டத்தால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டது. டெய்லர் மற்றும் பிளைன் இருவரும் இணைந்து 4 -வது விக்கெட்டிற்கு 107 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஐதரா பாத் டெஸ்டில் டெய்லர் இரண்டு இன் னிங்சிலும் குறைந்த ஸ்கோரில் அவுட்டானார்.
இந்திய அணி சார்பில் முன்னணி சுழற் பந்து வீச்சாளரான பிரக்ஞான் ஓஜா 90 ரன்னைக் கொடுத்து 4 முக்கிய விக்கெ ட் கைப்பற்றினார். தவிர, அஸ்வின் மற் றும் ஜாஹிர்கான் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்