முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல் விலைஉயர்வு: மத்தியஅரசுக்கு கூட்டணிக் கட்சிகள் கடும்கண்டனம்

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். - 15 - மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள மற்றும் ஆதரவு தரக்கூடிய திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், விலை உயர்வு குறித்து தங்கள் கட்சியிடம் கலந்து பேசவில்லை என்றும் கூறியிருக்கிறார். மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி கட்சியும் விலை உயர்வு நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விலை உயர்வு விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் நலன் கருதி திரும்பப் பெற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல் பரூக்கி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்