முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியஅரசுக்கு ஆதரவு வாபஸா? மாயாவதிகட்சி அக்.11-ல் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ,செப்.- 16 - மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு தொடர்ந்து கொடுப்பதா? அல்லது வாபஸ் வாங்குவதா என்பது குறித்து வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி இறுதி முடிவு எடுக்கிறது. மத்திய அரசானது டீசல் விலையை உயர்த்தி உள்ளது. அதோடுமட்டுமல்லாது அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருப்பதற்கு மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதனால் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை அந்த கட்சி வாபஸ் வாங்கலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக கட்சியின் தலைவர் மாயாவதி நேற்று லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் கன்சிராம் 6-வது நினைவு தினம் வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதனையொட்டி லக்னோவில் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பேரணியின்போது மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். கடந்த பல நாட்களாக மத்திய அரசானது மக்களுக்கு எதிரான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது என்றும் மாயாவதி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்