முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் காலமானார்

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2012      சினிமா
Image Unavailable

சென்னை.செப்.- 17 - தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. திரைப்படங்களில் சென்னை மொழி பேசி நடித்து தனக்கென தனி பாணி ஏற்படுத்திக் கொண்டவர் லூஸ் மோகன். கடந்த சில காலமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் லூஸ் மோகன். இந்நிலையில், நேற்று  அதிகாலை 5.30 மணியளவில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. இதையடுத்து, மயிலாப்nullர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் மயிலாப்nullரில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரையுலகினர், நண்பர்கள் பலரும் அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.நேற்று மாலை 4 மணி அளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மயிலாப்nullர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  லூஸ் மோகனின் தந்தை லூஸ் ஆறுமுகம். இவரும் திரைப்பட நடிகர். ``டைட் அண்ட் லூஸ்'' படத்தில் லூஸ் என்ற கதாபாத்திரத்தில் ஆறுமுகம் நடித்தார். அன்று முதல் அவரது பெயருக்கு முன்னால் லூஸ் என்ற பட்டப்பெயர் ஒட்டிக்கொண்டது. பின்பு அவரது மகன் மோகன் நடிக்க வந்தபோது, தனது தந்தையின் பட்டப் பெயரான லூஸ் என்பதை தன் பெயருடன் சேர்த்துக் கொண்டார். சிறு வயது முதல் நாடகங்களில் நடித்து வந்த மோகன், பி.யு.சின்னப்பா நடித்த ஹரிச்சந்திரா படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். என் காதல் கண்மணி படம் மூலம் பிரபலமானவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட 4 தலைமுறை நடிகர்களுடன், பிரபல நடிகர்கள் ரஜினி, கமல் முதற்கொண்டு தற்போதைய நடிகர்கள் வரை நடித்துள்ள லூஸ் மோகன், 1,000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை தமிழை திரையில் பிரபலப்படுத்திய லூஸ் மோகன், விட்டு விட்டுப் பேசி காமெடி செய்யும் விதம் தனி விதமானது என்றால் மிகையாகாது. 3 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்ததில் 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார். ஆனால், படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். மேடை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்துகொண்டார். லூஸ்மோகனின் மனைவி எம்.பச்சையம்மாள், கடந்த 2004-ம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு ரேவதி, சீதா, லட்சுமி என்ற 3 மகள்களும் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony