சட்ட விரோதமாக குடியேறிய 22 வங்க தேசத்தவருக்கு சிறை

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

இம்பால். செப்.23 - சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய  22 வங்க தேச நாட்டவருக்கு  தலா 2 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்காள தேசத்திலிருந்து  இந்திய பகுதிக்குள்ள  குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களுக்குள்  சட்ட விரோதமாக குடியேறுவது  அதிகரித்து வருகிறது.

இதை  கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

என்றாலும் கூட இந்த நிலை தொடர்ந்து  காணப்படுகிறது.மணிப்பூர் மாநிலத்தில்  சட்ட விரோதமாக குடியேறிய  22 வங்க தேச நாட்டவர் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தார்கள். இவர்கள்  சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்பதை கண்டறிந்த மணிப்பூர் போலீசார்  22 வங்க தேச நாட்டவர்கள் மீது இந்திய வெளிநாட்டு  சட்டம் 1946 ந் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு  விசாரணை  கிழக்கு இம்பால்  மாவட்டத்தில் உள்ள முதலாவது  ஜூடிசியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

 இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளங 22 பேருக்கும்  தலா 2 ஆண்டுகள்  சிறை  தண்டனை விதித்து  மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.இந்த 22 பேருடன் இருநத  2 குழந்தைகள்  சிறுவர்  சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறை தண்டனை காலம் நிறைவடைந்த பிறகு  அவர்கள் 22 பேரையும் அவர்களது  சொந்த நாட்டிற்கு  நாடு கடத்தும்படி  அதிகாரிகளுக்கு மணிப்பூர் மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வங்காள தேசத்திலிருந்து  இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் மணிப்பூர் போலீசார்  தீவிரமாக ஈடுபட்டு  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: