எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.- 11 - பெற்றோரை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும் கல்வி கட்டணத்தை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முத்தரப்பு குழு அமைத்து குறைப்போம் என்று ஜெயலலிதா கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று தென்சென்னையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முதலில் மயிலை மாங்கொல்லையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:
ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழ் நாட்டை மீட்டெடுக்க நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு தான் நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் என்பதை உங்களுக்கெல்லாம் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கருணாநிதி குடும்பத்தினரும், திமுகவைச் சேர்ந்த ஒரு சில தலைவர்களின் குடும்பத்தினரும், தமிழ் நாட்டை சூறையாடி உலகப் பெரும் பணக்காரர்களாக மாறி இருக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பது தான் உலகம் உங்கள் முன் வைக்கும் கோரிக்கை. கடுமையான மின்வெட்டு; எந்தப் பொருளையும் யாரும் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து நிற்கும் விலைவாசி; ஊருக்கு ஊர் ரவுடி சாம்ராஜ்ஜியம்; மணல் கொள்ளை; அரிசி கடத்தல்; எதைத் தொட்டாலும் ஊழல்; சமூகத்தில் யாருமே சுதந்திரமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாது என்ற அக்கிரமம்; அடிதடி; கட்டப் பஞ்சாயத்து; கள்ளச் சாராயம் என்று என்னென்ன சமூக தீமைகள் உண்டோ அவை அனைத்தும் தலைவிரித்து ஆடும் சூழ்நிலை இன்றைக்கு தமிழ் நாட்டில் நிலவுகிறது.
இந்தத் தேர்தல் மூலம் தமிழ் நாட்டை மீட்டெடுக்கவில்லை என்றால் வேறு எப்பொழுது கருணாநிதியின் குடும்பத்திடமிருந்து தமிழ் நாட்டை மீட்கப் போகிறோம் என்று நல்லோர்களின் மனசாட்சி நம்மையெல்லாம் பார்த்துக் கேட்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் தேச சொத்தை கொள்ளையடித்த கருணாநிதி கும்பலுக்கு தமிழ் நாடு என்ன தண்டனை கொடுக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள இந்த நாடே காத்திருக்கிறது. தேச விரோத சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டு, கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் நடத்தியிருக்கும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தை தமிழக வாக்காளர்கள் வேறோடும், வேறடி மண்ணோடும் வீழ்த்தினார்கள் என்ற வரலாற்றுச் சாதனையை செய்து முடிக்க உங்கள் முன் வருவது தான் இந்தத் தேர்தல்.
பொருளாதார வளர்ச்சியிலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு, கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் மிகவும் பின்தங்கிவிட்டதை நீnullங்கள் அறிவீர்கள்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழ் நாட்டின் கடன் என்பது தான் கருணாநிதி நடத்திய கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின் தலையாய சாதனை. தானும், தன் குடும்பமும் மக்கள் பணத்தில் வளம் பெற, எப்படியெல்லாம் திட்டம் தீட்ட வேண்டுமோ அப்படியெல்லாம் திட்டம் தீட்டி பல வழிகளில் மக்களுக்கு நன்மை செய்வதைப் போல மக்கள் பணத்தைக் கொள்ளையடித்திருக்கும் ஒரு பேராசைக்கார கும்பல் தமிழ் நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறது. இலவச கலர் டிவி என்று அரசு பணத்தைக் கொண்டு மக்களுக்கு 2,000 ரூபாய் மதிப்புள்ள டிவியை கொடுத்துவிட்டு; ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஆண்டுக்கு 1,000 ரூபாய் கேபிள் கட்டணம் வசூலிக்கும் ஒரு திட்டம் போதும் கருணாநிதி குடும்பத்தின் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் நமக்கு விளக்கிச் சொல்ல.
வாக்காளப் பெருமக்களே, சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளைக்காரர்களை எதிர்த்து நம் முன்னோர்கள் போராடியதைப் போல, இந்த தேர்தல் களத்தில் கருணாநிதி குடும்பம் என்ற கொள்ளைக்கார கூட்டத்தை எதிர்த்து மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டியது நம் ஒவ்வொருவர் முன்னும் இருக்கும் கடமை என்பதை உங்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறேன். சில ஆண்டுகள் மத்தியில் அமைச்சராக இருந்து, சில ஆண்டுகள் மாநிலத்தில் ஆட்சி நடத்தி, இத்தனை லட்சம் கோடி ரூபாயை ஒரு குடும்பம் சம்பாதித்தது என்பது உலகத்தில் வேறு எங்குமே காண முடியாத அதிசயம்.
எனதருமை வாக்காளப் பெருமக்களே! தமிழ் நாடு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதன் காரணம் என்னவென்று இப்பொழுது புரிகிறதா உங்களுக்கு?
பீகாரை விட, குஜராத்தை விட, பஞ்சாபை விட இன்றைக்கு குறைந்த வளர்ச்சி நிலைக்கு தமிழ் நாடு தள்ளப்பட்டிருக்கிறதே காரணம் என்ன? தமிழர்கள் பாடுபட்டு உழைக்கவில்லையா? தமிழர்கள் சேமிக்கவில்லையா? தமிழர்கள் சிக்கன வாழ்க்கை வாழவில்லையா? பின், ஏன் தமிழகம் தாழ்ந்து போனது? ஒரே ஒரு காரணம் தான். அது, தன் குடும்ப வளர்ச்சி ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு அதற்கேற்ப மட்டுமே திட்டங்களைத் தீட்டி, அதற்காகவே ஆட்சியை நடத்திய கருணாநிதி என்ற ஒரு மனிதர் தான் இதற்குக் காரணம்.
தலைமுறை தலைமுறையாக பாடுபட்டு தொழில் நடத்துபவர்களெல்லாம் பொருளாதார ஏற்ற இறக்கங்களில் அல்லல்படும் போது, கருணாநிதியும் அவரது குடும்பத்தினர் மட்டும் ஒரு தலைமுறை காலத்திற்குள் குபேரர்களாக மாறி இருப்பதன் மர்மம் என்ன? இந்த கொள்ளைகளுக்கெல்லாம் மக்களை சுரண்டும் இந்த கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க உங்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இந்தத் தேர்தல். வாக்காளப் பெருமக்களே, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவிற்கு ஊழலில் சாதனை செய்திருக்கிறது கருணாநிதி குடும்பம். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவிற்கு திமுக கூட்டணி போட்டியிட்ட இடங்களில் எல்லாம் டெபாசிட் இழந்தது என்ற புதிய சாதனையை தமிழக வாக்காளர்களாகிய நீnullங்கள் செய்து முடிக்க வேண்டும். செய்வீர்களா? நீnullங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கோஷம்) அப்போது தான் உங்களை சுரண்டிய ஒரு மனிதருக்கு nullநீங்கள் சரியான தண்டனை கொடுத்தீர்கள் என்று உலகம் உங்களை பாராட்டும். இப்படிப்பட்ட சுயநலவாத கருணாநிதி கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சாதனைகளை செய்திருப்பதாக கூறுகிறார். என்ன சாதனை செய்தார் கருணாநிதி?
தன்னுடைய மகனை துணை முதலமைச்சர் ஆக்கினார். மற்றொரு மகனை மத்திய அமைச்சராக ஆக்கினார். பேரனை மத்திய அமைச்சர் ஆக்கினார். மகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கினார். இதுதான் கருணாநிதியின் ஐந்தாண்டுகால சாதனை.
ஊழல் செய்வதில் கருணாநிதிக்கு நிகர் யாருமில்லை. 35 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் வல்லவர் என்று nullநீதிபதி சர்க்காரியாவிடமிருந்து சான்றிதழ் பெற்றவர் கருணாநிதி. இதுவரை வேறு எந்த முதலமைச்சரும் இப்படிப்பட்ட ஒரு சான்றிதழை பெற்றதில்லை. தமிழக மக்களுக்காக எந்த தியாகத்தையும் கருணாநிதி செய்யவில்லை. சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க நினைக்கிறார் கருணாநிதி.
வாக்காளப் பெருமக்களே, ஏமாந்து விடாதீர்கள்! ஒரு குடும்பம் மட்டும் வளம் பெற, ஏழு கோடி குடும்பங்கள் அவதிப்பட வேண்டுமா? சிந்தித்து மனசாட்சிப்படி செயல்படுங்கள். ஏழு கோடி மக்கள் வளர்ச்சி பெற; தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கிட; தமிழர்கள் தலை நிமிர்ந்து நின்றிட; பண நாயகத்தின் மூலம் ஜனநாயகத்தை விலை பேச நினைக்கும் கயவர் கூட்டத்தை ஒழித்திட; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாக்காளப் பெருமக்களே, கருணாநிதியை இப்படியே விட்டுவிட்டால், தமிழக மக்களாகிய உங்களை எல்லாம் விரட்டிவிட்டு, தமிழகத்தையே தன் குடும்ப வசம் ஆக்கிக் கொண்டுவிடுவார். உங்களை விரட்ட நினைக்கும் கருணாநிதியை நீnullங்கள் விரட்டியடிக்க வேண்டும். செய்வீர்களா? nullநீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
ஜனநாயக நாட்டில் அதற்கான ஒரே வழி தேர்தல் தான். இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கருணாநிதியை குடும்பத்தோடு நீnullங்கள் அப்புறப்படுத்த வேண்டும். நான் முதலமைச்சராக இருந்த போது இலவச சைக்கிள், இலவச பாடப் புத்தகம், உழவர் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மழைnullநீர் சேகரிப்புத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மின்வெட்டு என்ற பிரச்சினையே இல்லாமல் இருந்தது. தொழில் வளர்ச்சி பெருகியது. விவசாய உற்பத்தி அதிகரித்தது. சட்டம்ஒழுங்கு சீராக இருந்தது.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உங்கள் பணத்திலிருந்து ஒரு சிலவற்றை உங்களுக்கு கொடுத்து, தன் குடும்ப வருமானத்தை பெருக்கிக் கொள்ளக்கூடிய திட்டங்களை மட்டுமே கருணாநிதியால் செயல்படுத்த முடியும். வளர்ச்சித் திட்டங்களை கருணாநிதியால் செயல்படுத்தவே முடியாது. அதை என்னால் நிச்சயம் செயல்படுத்த முடியும். ஏற்கெனவே செயல்படுத்தி காட்டி இருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்காளப் பெருமக்களே, கருணாநிதியால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமா? முடியாது. ஏனெனில் கடத்தல் பதுக்கல் தொழில்கள் மூலம் அவருடைய குடும்பத்திற்கு வருமானம் வருகிறது. ஐந்தாண்டுகளாக கருணாநிதியால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் என்னால் நிச்சயம் முடியும். இதை ஏற்கெனவே எனது ஆட்சிக் காலத்தில் நிரூபித்துக் காட்டி இருக்கிறேன்.
கருணாநிதியால் மின்வெட்டைப் போக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்வெட்டைத் தான் அதிகப்படுத்தி இருக்கிறார் கருணாநிதி. ஆனால், என்னால் மின்வெட்டைப் போக்க முடியும். எனது ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக ஆக்கிக் காட்டி இருக்கிறேன். கருணாநிதியால் சட்டம்ஒழுங்கை பேணிக் காக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டம்ஒழுங்கை நிலைநாட்டாத கருணாநிதி இனிமேலா நிலை நாட்டப் போகிறார்? ஆனால், என்னால் நிச்சயம் சட்டம்ஒழுங்கை பாதுகாக்க முடியும். கருணாநிதியால் கேபிள் டி.வி. தொழிலை அரசுடைமையாக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. தமிழ்நாட்டில் இந்தத் தொழிலை நடத்துகின்ற ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான். ஆனால், என்னால் கேபிள் டி.வி. தொழிலை அரசுடமையாக்க முடியும். நிச்சயம் இந்த முறை அதை நடத்திக் காட்டுவேன். கருணாநிதியால் திரைப்படத் துறையை சுதந்திரமாக செயல்பட வைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. இந்தத் தொழிலே கருணாநிதியின் குடும்பத் தொழிலாகிவிட்டது. ஆனால், என்னால் முடியும்.
குடிநீர் பிரிச்சனைக்கு புதிய வீராணம் திட்டம் கொண்டு வந்தேன். கடல் நீரை குடிநீராக்கும திட்டம் கொண்டுவந்து குடிநீர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கையை மேற்கொண்டேன். தமிழகத்தில் எல்லா வகையிலும் கொள்ளை அடித்த கருணாநிதி குடும்பம், கல்வித்துறையையும் விட்டுவைக்கவில்லை. தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு எதிராக கருணாநிதி குடும்பத்தினர் என்ன செய்தனர்?
கல்விக்கட்டணம் சம்பந்தமாக நீதியரசர் கோவிந்தராஜன் கமிட்டி அமைத்தார்கள். கோவிந்தராஜன் கமிட்டி அறிக்கையை சமர்ப்பித்தது. தனியார் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்ககூடாது என்று அறிவித்தது. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள் , இவர்களுக்கு கப்பம் கட்டிவிட்டு கூடுதல் கட்டணங்களை பெற்றோரிடம் வசூலித்தது. இதனால் பாதிக்கப்பட்டது கூடுதல் கட்டணம் கட்டிய பெற்றோர்களும், கப்பம் கட்டிய கல்வி நிறுவனங்களும் தான்.
இதிலும் இவர்கள் குடும்பம் தான் ஆதாயம் அடைந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரு முத்தரப்பு குழு அமைத்து, கல்விக்கட்டணம் குறைக்கப்படும்.
தோல்வி பயத்தால் கருணாநிதி குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்கிறார். ராமாயணத்தில் ஒரு கதை உண்டு. ராமன் யுத்தத்தில் எப்படியும் வென்றுவிடுவான் என்று தெரிந்து கொண்ட ராவணன், ராமனின் மன உறுதியை சீர்குலைக்க, ஒரு மாய சீதையை உருவாக்கி, அந்த சீதையை கொல்வது போல் ஒரு காட்சியை உருவாக்கினான். இதனால், ராமன் தன் கண் எதிரிலேயே தன் மனைவி கொல்லப்படுவதை பார்த்து மயங்கி விழுந்தான்.
ராமனைத் தேற்றிய விபீஷணன் இந்த காட்சி உண்மையல்ல, மாயத்தோற்றம் என்றான். கருணாநிதியும் தான் தோற்பது உறுதி என்று தெரிந்ததால், வாக்காளர்களை மனமாற்றம் அடையச்செய்ய, பணத்தை வாரி இறைக்கிறார். 3 நாளில் பண மழை கொட்டுகிறது. பணத்தை வாங்கிக்கொண்டு வாக்காளர்கள் ஓட்டு போடுவார்கள் என்று திட்டமிடுகிறார்கள். தேர்தல் முடிவுகள் கருணாநிதியின் ஊழல் பணத்தால் மாறாது. நமது வெற்றியை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. யாரும் சோர்வடைய வேண்டாம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் பெரும்பாலானவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய திட்டங்கள் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு; தமிழ்நாட்டை கயவர்களிடமிருந்து காப்பாற்ற; இந்தியாவிலேயே தமிழகத்தை, முதன்மை மாநிலமாக ஆக்க; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.