முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ. எம்.பி.வீட்டை தாக்கி ரூபாய், நகை கொள்ளை

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ,ஏப்.- 11 - பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யின் வீட்டை கொள்ளையர்கள் தாக்கி ரூபாய் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பன்ஸ்கான் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி. கமலேஷ் பாஸ்வானின் வீடு மாநில தலைநகர் லக்னோவில் உள்ளது. கமலேஷ் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டனர். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு நேரத்தில் அவரது வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து ரொக்கம் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காலையில்தான் தெரியவந்தது. வீட்டின் பூட்டும் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது.  உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டிற்குள் போய் பார்த்தபோது கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. ரொக்கம் ரூ.20 ஆயிரம், இரண்டு தங்க ஜெயின், ஒரு மோதிரம், கடிகாரம், கேமிரா, பட்டுப்புடவைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையர்கள் எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்