முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஆக. 2 - இலங்கையில் நடந்து வரும் டி - 20 உல கக் கோப்பை போட்டடியில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா? என்பது இன்று தெரிய வரும். உலகக் கோப்பை போட்டிகள் இலங் கையில் கடந்த 2 வார காலமாக நடை பெற்று வருகின்றன. முதலில் லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. தற்போது சூப் பர் - 8 ஆட்டம் நடக்கிறது. 

இந்த சூப்பர் - 8 ஆட்டத்தில் இந்திய அணி முதல் லீக்கில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. இதில் ஆஸி. அணி சிறப்பாக ஆடி 9 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இந்திய அணி 2- வது லீக்கில் பரமஎதிரியான பாகிஸ் தானை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினர். இறு தியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. 

சூப்பர் - 8 சுற்றில் இந்திய அணி எப் பிரிவில் இடம் பெற்று உள்ளது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற் றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

ஆஸ்திரேலிய அணி இதுவரை 2 ஆட்ட த்தில் ஆடி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 1 வெற்றியும், 1 தோல்வியும் பெற்று உள்ளன. 

எனவே அரை இறுதியில் இடம் பிடிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக ளிடையே இழுபறி ஏற்பட்டு உள்ளது. இந்திய அணிக்கு இன்றைய போட்டி முக்கியமானதாகும். 

இந்த ஆட்டத்தில் இந்தியா தென் ஆப் பிரிக்காவை வெல்லும் பட்சத்தில், அரை இறுதி வாய்ப்பு அதிகரிக்கும். 

பாகிஸ்தானிற்கு எதிராக ஆடியதைப் போல இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து இந்தப் போட்டியில் ஆடி சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றி பெறலாம். 

தென் ஆப்பிரிக்கா அணி முதல் லீக்கில் பாகிஸ்தானிடம் தோற்றது. 2 -வது லீக் கில் ஆஸ்திரேலியாவிடம்  தோற்றது. தற்போது புள்ளிகள் பட்டியலில் கடை சி இடத்தில் உள்ளது. 

இருந்த போதிலும், தென் ஆப்பிரிக்கா அணி சிறந்த அணிகளில் ஒன்றாகும். எனவே அந்த அணியை குறைத்து மதி ப்பிட முடியாது. கடும் சவாலை அளி க்க வல்லது. 

பாகிஸ்தானிற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது  வீரர்க ளுக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது. எனவே இந்திய வீரர்கள் உற்சாக த்துடன் இந்தப் போட்டியில் களம் இறங்குகின்றனர். 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடக்க இருக்கும் இந்தப் போட்டி தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட்சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்