முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம், சட்டசபை சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்யவேண்டும்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், நவ. - 1 - சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்றம் சுமூகமாக செயல்படுவதை உறுதிப்படுத்துவதில் அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள சட்டப் பேரவையின் 125 ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, சட்டப்பேரவை, பாராளுமன்றம் ஆகியவற்றை எப்படி சுமூகமாக செயல்பட வைப்பது என்பதில் அரசியல் கட்சித் தலைவர்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது அவசியம். எதிர்ப்பு தெரிவித்தல் என்பது ஜனநாயக நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அது பக்குவமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு உட்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட வேண்டும். பாராளுமன்றம் ஓராண்டில் குறைந்தது 100 நாட்கள் நடைபெற வேண்டும். தற்போது இது சராசரியாக 54 நாட்கள் என்ற அளவில் உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் தங்களின் கடமை மற்றும் பொறுப்புணர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட அவைக்கான நெறிமுறைகளை சரியாக பின்பற்றுகிறார்களா என்பது குறித்து நான் அச்சமடைகிறேன் என்றார். முன்னதாக கேரள பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விஸ்வ மலையாள மகோற்சவம் 2012 விழாவில் பங்கேற்று பேசிய அவர், தொன்மையாலும், மரபாலும் எவ்வளவு செறிவூட்டப்பட்ட மொழியாக இருந்தாலும் முறையாக வெளிப்படுத்தாவிட்டால் அந்த மொழி பயன்பாட்டில் இருந்து வழக்கொழிந்து விடும். நம் அரிய கலாச்சாரம் மற்றும் மாயை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதற்கு மொழியை பாதுகாப்பது அவசியம் என்றார். தொடர்ந்து கேரள கலா மண்டலம் கலைஞர்களின் கதகளி, மோகினி ஆட்டம் நிகழ்ச்சிகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டு ரசித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்