முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாண்டி புயலுக்கு பலி 50 ஆகஉயர்வு சேதத்தை ஒபாமா நேரில் மதிப்பிடுகிறார்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,நவ.- 1 - அமெரிக்காவை சாண்டி புயல் தாக்கியதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். நியூயார்க்,நியூஜெர்சி ஆகிய மாகாணங்கள் சின்னாபின்னமாகிவிட்டன. சேதத்தை மதிப்பிட அதிபர் ஒபாமா நேரில் செல்கிறார். ஒரு அணுமின் உற்பத்தி நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்து சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியையொட்டி அட்லாண்டிக்கடலில் உருவான சாண்டி புயல் நேற்றுமுன்தினம் அமெரிக்க கிழக்க கடற்கரையை கடந்து தாக்கியது. இதில் நியூயார்க், நியூஜெர்ஜி ஆகிய மாகாணங்கள் பெரிதும் பாதித்தன. இந்த இரண்டு மாகாணங்களிலும் குறிப்பாக நியூஜெர்சி மாகாணத்தில் இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் தமிழர்கள் அதிகம் என்று கூறப்படுகிறது. ஏராளமான மரங்கள் சாய்ந்து மின்சார கம்பங்களில் விழுந்ததால் மின்துண்டிப்பு ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இருட்டில் வாழ்கின்றனர். வெள்ளத்தில் மூழ்கியும் வீடுகள் இழந்தும், மரங்கள் விழுந்ததிலும் இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நியூயார்க் நகரில் மட்டும் 18 பேர் பலியாகிவிட்டனர். கடந்த 1988-ம் ஆண்டுக்கு பின்னர் நியூயார்க் பங்கு சந்தை நேற்றுமுன்தினம் இரண்டாவது நாளாக மூடப்பட்டிருந்தது. கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் தாக்கியபோதுகூட நியூயார்க் பங்கு சந்தை ஒரு நாள் தான் மூடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நியூயார்க், நியூஜெர்சி ஆகிய மாகாணங்களில் பேரழி ஏற்பட்டுள்ளது என்றும் இந்த இரண்டு மாகாணங்களும் பேரழிவுக்கு உட்பட்ட மாகாணங்கள் என்று அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். நியூயார்க் மாகாணமும் நியூஜெர்ஜி மாகாணமும் அடுத்தடுத்து உள்ளது. நியூஜெர்சி மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிபர் ஒபாமா தேர்தல் பிரசாரத்தை விட்டுவிட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளார். புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று சேதத்தை மதிப்பீடு செய்கிறார். ஜப்பானில் சுனாமி வீசியபோது புகுஷிமா அணு உலையில் கடல்நீர் புகுந்தது மாதிரி ஒரு அணுமின்சார உற்பத்தி நிலையத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. ஆனால் ஏற்கனவே அந்த நிலையம் உள்பட பல அணுமின்சார நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதால் எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாண்டி புயலுக்கு பென்சில்வான்யா, கனெக்டிகட், மேரிலாண்ட், வடக்கு கரோலினா, மேற்கு வர்ஜினியா ஆகிய மாகாணங்களும் சாண்டி புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது கலிபோர்னியாவில் இருந்து கனெக்டிக்ட் வரை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. புயல் சேதம் ரூ.90 லட்சம் கோடி வரை இருக்கலாம் என்று தெரிகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த சாண்டி புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago