முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளியுறவு அமைச்சராக குர்ஷித் நியமனத்திற்கு வரவேற்பு

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன்,நவ.2 - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக சல்மான் குர்ஷித் நியமிக்கப்பட்டிருப்பதற்கு அமெரிக்கா வரவேற்று உள்ளது. இந்தியா-அமெரிக்க உறவில் மதிப்பிற்குரிய கூட்டாளி சல்மான் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர் சல்மான் குர்ஷித். இவருடை மனைவி ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையானது அரசு கொடுத்த ரூபாய் மற்றும் நலத்திட்ட உதவிகளை சரியாக செயல்படுத்தாததோடு ரூ.80 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது என்று ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தை சேர்ந்த அரவிந்த் கெஜரிவால் கடுமையாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதனால் அவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஞாயிறு அன்று மத்திய அமைச்சரவையில் பிரதமர் மன்மோகன் சிங் மாற்றம் செய்யதார். அப்போது சல்மான் குர்ஷித்தை நீக்குவதற்கு பதிலாக அவருக்கு வெளியுறவுத்துறை கொடுக்கப்பட்டது. இதனால் அரசியல் விமர்சனர்கள் பெரும் ஆச்சரியத்திற்கும் அதிரச்சிக்கும் உள்ளானார்கள். 

அதேசமயத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக சல்மான் குர்ஷித் நியமிக்கப்பட்டிருப்பதற்கு அமெரிக்கா வரவேற்று உள்ளது. இந்தியா-அமெரிக்க உறவில் சல்மான் மதிப்பிற்குரிய கூட்டாளி என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். குர்ஷித்துடன் சேர்ந்து பணியாற்றும் நாட்களை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டியிருக்கிறேன் என்றும் ஹில்லாரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் சல்மான் குர்ஷித் வேறு துறைகளில் பணியாற்றியபோது அவருக்கும் அமெரிக்காவுக்கும் நல்ல உறவு இருந்தது. குர்ஷித்திற்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் எங்களுக்கும் நல்ல உறவு நீடித்தது. வர்த்தகர் மற்றும் தொழிலதிபர்களுடன் குர்ஷித்திற்கு நல்லுறவு உள்ளது. இது அமெரிக்க உறவுக்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனி நேற்று வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago