முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் சீன அதிபராகும் ஜி ஜின்பாங்

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், நவ.7 சீனாவின் புதியஅதிபராக பொறுப்பேற்கக் கூடிய துணை அதிபர் ஜி ஜின்பாங் எப்படியான கொள்கைகளைக் கொண்டவர் என்பது பற்றிய தகவல்களை அப்படி ஒரு பரம ரகசியமாக காத்து வருகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி. சீனாவின் தற்போதைய அதிபர் ஹு ஜிண்டோவின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், 59 வயதான ஜி ஜின்பாங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்பதுடன் அதிபராகவும் பொறுப்பேற்க உள்ளார். உலகம் முழுவதும் எதிரொலிக்கும் பொருளாதார மந்த நிலைக்கு சீனாவும் தப்பவில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியில் சரிவு காணப்படும் நிலையில் புதிய அதிபராகும் ஜி ஜின்பாங் இவற்றை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்ற ஆர்வம் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாப் பாடகியை திருமணம் செய்து கொண்டவர் ஜின்பாங். இவரது தந்தை ஜி ஜோங்கன் மாவோ ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக இருந்தவர். 1975-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். அதன்பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது அதிபராக ஆகக் கூடிய நிலைக்கு உயர்ந்திருக்கிறார். நீண்டகாலம் அமெரிக்காவுடன் தொடர்பில் இருப்பவர். இவரது ஆட்சிக் காலத்திலாவது இரும்புத் திரை அகலுமா? என்ற கேள்வியைஜனநாயகவாதிகள் முன்வைக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago