முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரிமுனையில் பட்டாசு விற்பனைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 7 - சென்னை பாரிமுனை பகுதியில் பட்டாசு விற்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை பாரிமுனை பகுதியில் என்.எஸ்.சி.போஸ் சாலை, பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு, மலைய பெருமாள் தெரு உள்ளிட்ட 5 தெருக்களில் பட்டாசு விற்க சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க கேட்டு சென்னை வெடி பொருளின் வினி யோகிஸ்தர், நல சங்கத்தின் சார்பில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது. சென்னை பாரிமுனையில் சில்லறை வியாபாரிகள் கடந்த 50 வருடங்களாக வியாபாரம் நடத்தி வருகின்றனர். மேலும் தீவுதிடலில் பட்டாசு விற்க இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. தீவுத்திடலில் பட்டாசு விற்க இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. தீவுதிடலில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.மேலும் அங்கு அடிப்படை வசதிகள் குறைவு பொது மக்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. மேலும் விபத்தென்று நடந்தால் மொத்தமாக பெரிய விபத்து நடக்க வாய்ப்புள்ளது. ஆகையால் 50 வருடமாக நடத்தப்படும் இதே இடத்தில் தங்களுக்கு பட்டாசு விற்க அனுமதி வழங்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் எம். ஒய் இக்பால் மற்றும் டி.சிவஞானம் அடங்கிய முதன்மை டிவிசென் பென்சு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் ஏற்கனவே அரசு தீவுத்திடலில் மொத்த பட்டாசு வியாபாரம் நடத்த சகல ஏற்பாடுகளையும் செய்து முடிந்த நிலையில் அந்த இடம் வியாபாரம் செய்ய தயார் நிலையில் உள்ளது. ஆகையால் சென்னை பாரிமுனை பகுதியில் பட்டாசுகள் விற்க அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்