முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடஒதுக்கீட்டை அனுபவிக்ககிராம பென்களுக்கு போதிய கவர்ச்சிஇல்லை

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ, நவ. - 11 - பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவானது தலித், இஸ்லாமிய, இதர பிற்படுத்தப்பட்டோரின் நலனையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டால் ஆதரவளிப்பதில் தயக்கம் இல்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். லக்னோ அருகே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இடஒதுக்கீட்டால் பணக்கார பெண்கள்தான் பயனடைகின்றனர். கிராமத்துப் பெண்களாகிய உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. நமது கிராமப் பெண்கள் அந்த இடஒதுக்கீட்டை அனுபவிக்க அவ்வளவு கவர்ச்சியானவர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முலாயம்சிங், அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கக் கூடிய மசோதாவாக இருந்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்போம் என்று கூறியுள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்த சமாஜ்வாதி கட்சியின் தற்போதைய நிலைப்பாடு மிகப் பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்