முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூர் வாக்குச் சாவடிக்குள் மு.க.ஸ்டாலின் - பொதுமக்கள் கேள்வி

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.14 -  கொளத்தூர் வாக்குச் சாவடிக்குள் சென்ற மு.க.ஸ்டாலின் 20 நிமிடத்திற்குப்பின் வெளியே வந்ததால் உள்ளே என்ன நடந்திருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நேற்று காலை 11.30 மணிக்கு அகரம் எஸ்.ஆர்.காலனி 7-வது தெருவில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு தி.மு.க. சகாக்களோடு நுழைந்தார். அப்போது பெரவள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத் பணியில் இருந்தார். அப்போது தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 11.30 மணிக்கு வாக்குச் சாவடிக்குள் வந்தபோது கதவை திறந்து விட்டார். தி.மு.க.வினர் செல்லும் வரை உள்ளே அனுப்பி விட்டு பத்திரிகையாளர்கள் நுழையும்போது, யாரும் உள்ளே நுழைய கூடாது என பிடிவாதம் செய்ததுடன் நிருபர்களிடம் வாய் தகராறில் ஈடுபட்டார். 

உள்ளே சென்ற மு.க.ஸ்டாலின் 20 நிமிடம் கழித்து வெளியே வந்தார். நிருபர்கள் வெளியில் காத்திருந்ததால் வாக்குச் சாவடிக்குள் சென்ற மு.க.ஸ்டாலின் உள்ளே என்ன செய்தார் என்று தெரியாமலேயே போனது. மேலும் அப்போது ஓட்டுச் சாவடிக்கு ஓட்டு போட வந்தவர்களையும் போலீசார் உள்ளே அனுப்பவில்லை. இதனால் கோபம் கொண்ட பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க நாங்கள் வந்துள்ளோம். ஆனால் இங்கே 20 நிமிடமாக  வேட்பாளர் உள்ளேயே உள்ளார். அங்கு என்ன நடக்கிறது? என்று கோபமாக கேட்டனர். மறுபடியும் மு.க.ஸ்டாலின் 4.10-க்கு வந்து 5 நிமிடம் உள்ளே இருந்தார். அப்போது அவருடன் தி.மு.க. மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான வி.எஸ்.பாபு உடனிருந்தார். இந்த தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமிக்கு ஆதரவு அபரிமிதமாக இருந்தததால் பொதுமக்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டது. பூத்தின் உள்ளே 20 நிமிடம் இருந்தது. தில்லு முல்லுக்கு வழி வகுக்க இருக்கலாம் என பொதுமக்கள் பேசி கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago