பாலஸ்தீன தாக்குதலை நிறுத்தியது இஸ்ரேல்

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

காசா, நவ. 23 - ஒருவார காலமாக பாலஸ்தீனம் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல்- ஹாமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் கொடூர தாக்குதலை ஒருவாரத்துக்கும் மேலாக நடத்தி வந்தது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 160 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இருதரப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள எகிப்து நாடு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது கமல், இருதரப்பு போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் அலுவகலமும் அறிவித்திருக்கிறது. போர் நிறுத்தம் தொடர ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குத்லை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: