மனிதநேய கட்சிக்கு 3 தொகுதிகள்

ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011      அரசியல்
Alliance

 

சென்னை, பிப்.21-அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய கட்சிக்கு 3 தொகுதிகள்  - ஜெயலலிதா அறிவிப்பு.

நடைபெற உள்ள 2011 தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், மனிதநேய கட்சிக்கும் இடையே நேற்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது மற்றும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ்  ஆகியோர் நேரில் சந்தித்தனர். 

அப்போது நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது. இந்நிகழ்வின் போது அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: